இப்படி இருக்கனும் ஆஃபர்.. பட்ஜெட்ல Samsung 5ஜி போன்.. 50 எம்பி கேமரா.. 25W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஏ சீரிஸ் மாடல்கள் பக்கா பீச்சர்களுடன் நம்ப முடியாத விலைக்கு வருகின்றன. சமீபத்தில் அறிமுகமாக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் நல்ல தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனால் விற்பனையிலும் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போனுக்கு 11 சதவீத தள்ளுபடி கிடைத்துள்ளது. ஆகவே, ரூ.19,499 விலைக்கு விற்பனைக்கு வருகிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.900 கூடுதல் தள்ளுபடியும் பெற்று கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): ஆக்டா-கோர் என்ஸினோஸ் 1330 5என்எம் (Octa-Core Exynos 1330 5nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஒன் யுஐ 7.0 (One UI 7.0 ) அடிப்படையிலான ஆணட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் வெளியவந்துள்ளது
6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படும் என்று சாம்சங் இந்தியா தெரிவித்துள்ளது. 6.7 இன்ச் இன்பினிட்டி யூ சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி கிடைக்கிறது. 1080 x 2340 பிக்சல்கள் கொடுண்டுள்ள ஃபுல் எச்டி பிளஸ் ரெசொலூஷன் கொடுத்துள்ளது. மேலும், இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பீச்சர்களும் வழக்கப்பட்டுள்ளன. 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்னும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 13எம்பி செல்பீ கேமரா உடன் இந்த சாம்சங் வருகிறது.
இந்த கேமராவை செல்பிகளுக்கும், வீடியோ கால்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். பாதுகாப்புகாக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side mounted fingerprint scanner) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், IP54 தரத்திலான தூசி மற்றும் தண்ணீர் பாதுகாப்பை கொடுக்கிறது. பாட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்களை இந்த போன் கொடுத்துள்ளது.
இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கிடைத்துள்ளது. 5ஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. வை-பை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரிக்கு மேல் 2டிபிக்கு எஸ்டி கார்டு ஆதரவு உள்ளது.
பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் கிரே (Grey ) ஆகிய மூன்று கலர் விருப்பங்களில் இந்த இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் கிடைப்பதை போலவே அமேசான் தளத்திலும் கிடைக்கிறது. மேலும், சாம்சங் இந்தியா இ-ஸ்டோரிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ள முடியும். 8ஜிபி ரேம் கொடுக்கும் மாடலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








