வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 6 வருட OS அப்டேட்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16574 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகள் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): தரமான எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
அதுவும் OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.
5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications