மொத்த வெயிட்டிங் இந்த SAMSUNG-க்கு.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போனுக்கு வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர். சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் கிடைக்க இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு நெருங்கிவிட்டது.
பட்ஜெட் விலையில் வெளியாகும் சாம்சங் மாடல்கள் முதலில் மற்ற மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கும். அதன்பிறகே இந்திய மார்கெட்டில் வெளியாகும். இது பல்வேறு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நடந்துள்ளது. இப்போது, சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நடக்க இருக்கிறது. ஏனென்றால், யுகே மார்கெட்டில் இதன் விற்பனை தொடக்கிவிட்டது.

இதனால், ஓரிரு நாட்களில் இந்திய வெளியீட்டு விவரங்கள் உறுதி செய்யப்படும் என்பதில் சந்தேமகமில்லை. ஐரோப்பிய மார்கெட்டில் ரூ.24,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகி இருந்தாலும், இந்தியாவில் அதைவிட மலிவான விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே, இந்திய விலை குறித்த விவரங்கள் கசிந்துவிட்டன. முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, அவற்றை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மூன்று வேரியண்ட்கள் வெளியாக இருக்கிறது. இதுபோக 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) கிடைக்கிறது. வழக்கம்போல பட்ஜெட்டிலும் டிரிபிள் ரியர் கேமரா கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கவில்லை. ஆகவே, இந்தியாவில் நிச்சயம் பட்ஜெட்டில் கிடைக்கும். அதேபோல இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்காது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கிடைக்கிறது. இருப்பினும், டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலைக்கு ஏற்ப IP54 ரேட்டிங் கொண்ட் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஐரோப்பிய மார்கெட்டில் ரூ.24,330 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.18,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிட மலிவான விலைக்கும் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதே பீச்சர்களுடன் பட்ஜெட்டில் பல சாம்சங் மாடல்கள் இந்தியாவில் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








