பக்காவான பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி போன்.. 6 ஆண்டுக்கு OS, AMOLED டிஸ்பிளே, 50MP OIS கேமரா!
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் வரிசையில் மற்றொரு ஆப்ஷனை சேர்க்க தயாராக உள்ளது. அது கேலக்ஸி ஏ17 5ஜி (Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் (செப்டம்பர் 2025 க்குள்) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளது
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ் (Tipster Abhishek Yadav), எக்ஸ் தளம் வழியாக - சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவலை பகிர்ந்து உள்ளார்.

இது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி ஏ16 5ஜி (Galaxy A16 5G) ஸ்மார்ட்போனின் தொடக்க விலையுடன் பொருந்துகிறது. இருப்பினும் அது 8ஜிபி ரேம் உடன் வந்தது. ஆக சாம்சங் இந்த ஆண்டு, அதன் ஏ 17 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இன்னும் மலிவான 6ஜிபி விருப்பத்தை சேர்ப்பதாகத் தெரிகிறது.
மேலும் சாம்சங் ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை பெறும் என்றும், இது ரூ.20,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்பதையும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் பரிந்துரைத்துள்ளார். கடைசியாக 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனும் இருக்கும், இது ரூ.23,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ சூப்பர் AMOLED பேனலுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சாம்சங் நிறுவனத்தின் Exynos 1330 சிப் மூலம் இயக்கப்படலாம்
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான One UI 7 உடன் வெளியாகலாம். சுவாரசியமாக சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஓஎஸ் அப்டேட்களை உறுதியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
கேமராக்களை பொறுத்தவரை, பழைய மாடலுடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணலாம். 50MP ப்ரைமரி சென்சார் இப்போது நிலையான ஷாட்களுக்கான OIS ஆதரவை பெறலாம். கூடவே இது 5MP அல்ட்ராவைடு, 2MP மேக்ரோ கேமராக்களுடன் இணைக்கப்படலாம். முன்பக்கத்தில் 13MP செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம்
கேமரா அப்கிரேட் உடன் சேர்த்து, இந்த ஸ்மார்ட்போனின் ஸ்லிம் டிசைனிலும் மேம்பாடுகள் இருக்கும். இது 7.5மிமீ தடிமன் மற்றும் 192 கிராம் எடையுடன் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 2025 வாக்கில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெயிட்டு தேதி அல்லது விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம். அதுகுறித்த தகவல் கிடைத்ததும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
சாம்சங் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை சாம்சங் நிறுவனத்தின் 3 லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் மீதுமே, அதாவது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Galaxy Z Fold 7), கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ (Galaxy Z Flip FE) மாடல்கள் மீதுமே டிஸ்கவுண்ட் அறிவிக்கபட்டு உள்ளது.
அது குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும். https://tamil.gizbot.com/mobile/samsung-announced-rs-12000-discount-on-galaxy-z-fold-7-flip-7-rs-10000-on-flip-7-fe-059781.html


Click it and Unblock the Notifications








