சத்தமின்றி அறிமுகமானது புது Samsung 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. 6 OS அப்டேட்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக AMOLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 25W சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் வெளியானது. இப்போது இந்த புதிய சாம்சங் போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன். மேலும செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆறு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாம்சங் போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating)கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். குறிப்பாக இந்த சாம்சங் போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளது.
ஆனால் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் கேலக்ஸி ஏ17 5ஜி போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போனின் ஆரம்ப விலை €230 (இந்திய மதிப்பில் ரூ.23,330)-ஆக உள்ளது. பிளாக், ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








