சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. என்ன விலை?
சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆறு வருட ஓஎஸ் அப்டேட், 50எம்பி ரியர் கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி விலை: 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.20,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.23,499 விலையில் வாங்க முடியும். தற்போது இந்த புதிய சாம்சங் போன் நிறுவனத்தில் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த சாம்சங் போனை அமேசான், பிளிப்கார்ட் தளங்களிலும் வாங்க முடியும். பிளாக், ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங்கின் வலைத்தளம் வழியாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதேபோல் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆறு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.
குறிப்பாக 5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








