வாங்குனா இந்த Samsung 5ஜி போன் வாங்கனும்.. AMOLED டிஸ்பிளே.. 6 OS அப்டேட்.. என்ன விலை? எப்போது அறிமுகம்?
இந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இந்நிலையில் இதே சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி, வரும் வாரங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய சாம்சங் போனின் இந்திய விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தற்போது இந்த போனின் விலையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் ரூ.18,999 விலையில் அறிமுகமாகும். பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.20,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.23,499 விலையிலும் அறிமுகாகும் என்று அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆறு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன். மேலும செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாம்சங் போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் 5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.


Click it and Unblock the Notifications








