Home
Mobile

இதுதான் புதிய Samsung 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): 6.7-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதான் புதிய Samsung 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1330 எஸ்ஒசி (Exynos 1330 SoC) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இதுதான் புதிய Samsung 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 15(Android 15) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கேலக்ஸி ஏ17 5ஜி மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் இந்த புதிய சாம்சங் போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit: androidheadlines

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A17 5G full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X