Home
Mobile

கொஞ்சம் கேப் விடுங்க Samsung அண்ணே.. 6 ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. 50MP கேமரா.. புதிய போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி (Samsung Galaxy A17 4G) மாடலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 4G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus+ protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

கொஞ்சம் கேப் விடுங்க Samsung அண்ணே.. புதிய போன் அறிமுகம்! எந்த மாடல்?

One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. ஏஐ அசிஸ்டன்ட், சர்க்கிள் டூ சர்ச்ச் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99 chip) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸ்மார்ட்போன் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.

5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளது.

கொஞ்சம் கேப் விடுங்க Samsung அண்ணே.. புதிய போன் அறிமுகம்! எந்த மாடல்?

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

ஆனால் சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஜெர்மனியில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 4ஜி போனின் விலை €199 (இந்திய மதிப்பில் ரூ.20,627)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A17 4G launched with Helio G99 chip: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X