Home
Mobile

பொளந்து கட்டிய சாம்சங்.. பட்ஜெட்ல 10X கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 10X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் பட்ஜெட்டில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) போனானது, இந்திய மார்கெட்டில் டைமன்சிட்டி சிப்செட்டை பேக் செய்ய இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி முழு பீச்சர்கள் எப்படி? விலை எவ்வளவு? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ஐரோப்பிய மார்கெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி வெளியாகிவிட்டது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட்டை பேக் செய்துள்ளது. ஆனால், இந்திய மார்கெட்டில் எக்ஸினோஸ் சிப்செட்டுக்கு பெரிய வரவேற்பு கிடையாது. இதை புரிந்துகொண்ட சாம்சங் நிறுவனம் டைமன்சிட்டி சிப்செட்டுடன் இங்கு வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது.

பொளந்து கட்டிய சாம்சங்.. பட்ஜெட்ல 10X கேமரா.. AMOLED டிஸ்பிளே மாடல்!

இதனால், இந்திய சாம்சங் பிரியர்கள் குஷியாகிவிட்டனர். ஏனென்றால், இந்த போனின் மற்ற பீச்சர்கள் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கின்றன. கூடவே, பிரீமியம் டிசைனில் கவர்கிறது. ஆகவே, சிப்செட்டை தவிர மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கின்றன என்பதை முதலில் பார்ப்போம். அதேபோல டைமன்சிட்டி சிப்செட்டில் எந்த வெர்ஷன் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A16 5G Specifications): இந்த ஏ15 மாடலில் 6.7 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் பேக் செய்துள்ளது.

ஆகவே, 50 எம்பி ஆட்டோபோகஸ் மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 13 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 6.0 (One UI 6.0) இருக்கிறது. 6 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) இருக்கின்றன. இந்த சாம்சங்கில் சைடுமவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 200 கிராம் எடை வருகிறது. இருப்பினும், 7.9 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. பிளாக், ஒயிட் மற்றும் கிரீன் கலர்களில் வெளியாகி இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனின் இந்திய வேரியண்ட்டில் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Dimensity 6300 SoC) பேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஐரோப்பிய மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,960ஆக இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேமில்லை. அடுத்த சில வாரங்களில் இங்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A16 5G With Dimensity SoC To Launch Soon in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X