பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் ரூ.18,498 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சாம்சங் போனின் விலை குறைந்துள்ளது. இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே, 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.18,498 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வழங்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த போனை 16,749 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A16 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஒன் யுஐ 6.0 (One UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
தரமான மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். மேலும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2340 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஆனது 50 எம்பி மெயின் கேமரா (ஆட்டோபோகஸ்) + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. அதேபோல் இந்த மெயின் கேமராவில் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது.

குறிப்பாக IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போன். மேலும் 5000mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) போன்ற பல வசதிகள் உள்ளன. 5ஜி, 4ஜி எல்டிஇ,டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








