வெளுத்து விட்டாச்சு.. பட்ஜெட்ல 6 ஓஎஸ் அப்டேட்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களை வெயிட்டிங் மரண மோடில் வைத்திருந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) போனானது, இந்திய மார்கெட்டில் பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கிறது. சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6 ஓஎஸ் அப்டேட்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் போன்களில் மட்டுமே அதிக ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். ஆனால், சாம்சங் நிறுவனம் இதை பட்ஜெட் போன்களில் கொடுக்க தொடங்கிவிட்டது. ரூ.20,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு களமிறங்கி இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட்களை கொடுத்துள்ளது. அதேபோல 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A16 5G Specifications): இந்த போனில் 6.7 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொண்ட இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும். வாட்டர்-டிராப் நாட்ஜ் ப்ரன்ட் கேமரா உள்ளது.
சாம்சங் போன்களில் பட்ஜெட்டிலும் கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) இந்த போனிலும் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (ஆட்டோபோகஸ்) + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. ஒன் யுஐ 6.0 (One UI 6.0) மற்றும் வழக்கமான மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14-க்கு பிறகு 6 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த அப்டேட்களுடன் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 1.5 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கிடைக்கிறது. இந்த சாம்சங்கில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) வருகின்றன. எப்போதும் போல, சாம்சங்கின் பட்ஜெட் போன்களில் வரும் 5000mAh பேட்டி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ரூ.1000 கேஷ்பேக்குடன் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த சாம்சங் ஏ16 5ஜி போனில் ப்ளூ பிளாக் (Blue Black), கோல்டு (Gold) மற்றும் லைட் கிரீன் (Light Green) கலர்கள் ஆர்டருக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications








