Home
Mobile

அடி தூள்.. 6 வருட Android OS அப்டேட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் ஆறு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A16 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-யு டிஸ்பிளே (Super AMOLED Infinity-u Display) டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அடி தூள்.. 6 வருட Android OS அப்டேட்.. வருகிறது புது சாம்சங் 5ஜி போன்!

தரமான எக்ஸிநோஸ் 1330 சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்;ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனுக்கு ஆறு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating)உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடி தூள்.. 6 வருட Android OS அப்டேட்.. வருகிறது புது சாம்சங் 5ஜி போன்!

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி எல்டிஇ,டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய போன் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credit: techspecs.info

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A16 5G with 6 years of Android update will be launched in India later this month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X