Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 6 வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. 50MP கேமரா.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் நெதர்லாந்து இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே அங்கு விரைவில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாதம் இறுதியில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) ஆனது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆறு வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A16 5G Specifications): 6.7-இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2340 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா +5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸிநோஸ் 1330 சிப்செட் (Exynos 1330 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் One UI 6.1.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்..

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸமார்ட்போனின் எடை 200 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த போன்.

ப்ளூ பிளாக் (Blue Black), லைட் கிரீன் (Light Green) மற்றும் லைட் கிரே ( Light Gray) நிறங்களில் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A16 5G will be launched with six years of OS updates: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X