6.4-இன்ச் டிஸ்பிளே.. பட்ஜெட் விலை.. விரைவில் களமிறங்கும் புது சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. சாம்சங் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் கேலக்ஸி ஏ14 5ஜி போனை தொடர்ந்து கேலக்ஸி ஏ15 (Samsung Galaxy A15) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது இந்த கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக எக்ஸிநோஸ் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேலக்ஸி ஏ15 போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ஆனது ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது கேலக்ஸி ஏ14 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








