Home
Mobile

யோசிக்காம வாங்குவீங்க.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. பட்ஜெட் விலையில் புது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் கேலக்ஸ் ஏ14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்து கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் 2024-ம் ஆண்டு துவக்கத்தில் இந்த கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி வழக்கமான எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவராது. அதாவது கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். இந்த டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

50MP கேமரா.. பட்ஜெட் விலையில் புது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக 6.4-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 50எம்பி மெயின் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்புகளுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போன். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும்.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ14 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

Dimensity 700 சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன். எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

50MP கேமரா.. பட்ஜெட் விலையில் புது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை மிகவும் குறைவு.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். தற்போது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

photo courtesy:@ONLEAKS x @THETECHOUTLOOK

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A15 with OLED display will be launched early next year: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X