விஸ்வரூப பட்ஜெட்.. வெறும் ரூ.17,150 விலை.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் விலை பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படி சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி மாடல்கள் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போன்களின் முழு அம்சங்கள் விலை விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-யு நாட்ச் (Infinity-U notch) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எஸ்-அமோலெட் (S-AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. அதோடு ஒன் யுஐ 6.0 (One UI 6.0) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 2 மெமரி வேரியண்ட்கள் வருகின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இந்த சாம்சங் போனானது, பட்ஜெட் விலையிலும் டிரிபிள் கேமரா சிஸ்டம் (Triple Camera System) கொண்டிருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த சாம்சங் போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது.
மைக்ரோ எஸ்டி (microSD) கார்ட் சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கிள் போர்டெட் ஸ்பீக்கர் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த பேட்டரியோடு சேர்ந்து 200 கிராம் எடை மற்றும் 8.4 மிமீ தடிமன் கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி, ப்ளூடூத் 5.3, வை-பை 802 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டிகள் வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனில் பர்சனாலிட்டி யெல்லோ (Personality Yello), பேண்டஸி ப்ளூ (Fantasy Blue), ஆப்டிமிஸ்டிக் ப்ளூ (Optimistic Blue) மற்றும் பேன் லின் பிளாக் (Ban Linh Black) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதே சாம்சங் கேலக்ஸி ஏ15 மாடலில் 4ஜி வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த 4ஜி வேரியண்ட்டில் சிப்செட் தவிர மற்ற எல்லா அம்சங்களும் ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் ஹீலியோ 699 எஸ்ஓசி (MediaTek Helio G99 SoC) சிப்செட் வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.17,150 பட்ஜெட்டில் தொடங்குகிறது.
இந்த 2 போன்களிலும் புதியதாக கீ ஐலேண்ட் பீச்சர் (Key Island Feature) கொடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற சாம்சங் போன்களில் வரும் சென்சார் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் பட்டன்கள் கொண்டிருக்கும் டிசைனில் கூடுதலாக பார்டர் கொண்டிருக்கிறது. இந்த மாடல்கள் வியட்நாமில் அறிமுகம் செய்யப்படிருக்கின்றன. வரும் வாரங்களில் இந்தியாவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








