Home
Mobile

அடிச்சான் பாரு சாம்சங்.. ரூ.11,500 போதும்.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி புதிய சாம்சங் கேலக்ஸி ஏ15 ((Samsung Galaxy A15) ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாம்சங் போன் ஆனது 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ15 அம்சங்கள் (Samsung Galaxy A15 specifications): அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடிச்சான் பாரு சாம்சங்.. ரூ.11,500 போதும்.. 50MP கேமரா..எந்த மாடல்?

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் (128GB internal storage) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் 6835 சிப்செட் (octa-core MediaTek 6835 chipset) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அசத்தலான கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் வழங்கும் சாம்சங் நிறுவனம்.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (25W fast charging support) இதில் உள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

வைஃபை, புளூடூத், ஜிபிஸ், என்எப்சி, யுஸ்பி டைப்-பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 போனில் உள்ளன. மேலும் ஸ்ட்ரைக் ப்ளூ (Striking Blue) நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ15 போனின் விலை $139 (இந்திய மதிப்பில் ரூ.11,500) ஆக உள்ளது.

அடிச்சான் பாரு சாம்சங்.. ரூ.11,500 போதும்.. 50MP கேமரா..எந்த மாடல்?

தற்போது அமெரிக்காவில் வால்மார்ட் (Walmart), பூஸ்ட் மொபைல் (Boost Mobile) மற்றும் கிரிக்கெட் வயர்லெஸ் (Cricket Wireless) தளங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A15 with 50MP camera launched in US: check specifications, price, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X