எகுறுகிறது எதிர்பார்ப்பு.. ரூ.11000 விலையில் 5G போன்.. 1TB ஸ்டோரேஜ்.. 3 கேமரா.. சீன் காட்டிய Samsung போன்.. எந
பட்ஜெட் விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்றால், பலரின் விருப்பம் சாம்சங் (Samsung) பிராண்டாக மட்டுமே இருக்கும். கம்மி விலை மற்றும் இடைநிலை விலை பிரிவில் தரமான போன்களை சாம்சங் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில், மிக விரைவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) என்ற மாடலாகும். இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி சாதனம் விரைவில் இந்திய சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது எண்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறிமுகத்திற்கு முன்பாகவே, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் ரெண்டர்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. கூறப்பட்ட ஸ்மார்ட்போனின் விலையும் முன்பே லீக் ஆகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவில் ஆக்டா கோர் எக்சினோஸ் 1330 (octa-core Exynos 1330 SoC) சிப்செட் உடன் வந்த,
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G):
5,000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மாடலின் வாரிசாக இந்த மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G) ஆன்லைனில் வாங்குவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வால்மார்ட் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் 4ஜிபி + 128ஜிபி வேரியண்ட் உடன் $139 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி விலை (Samsung Galaxy A15 5G price):
இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 11,600 என பட்டியலிடப்பட்டுள்ளது. உண்மையில், இது மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் டீசெண்டான 5ஜி சாதனமாக மாறுகிறது. இது ஒற்றை ப்ளூஇஷ் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது, இதன் டிஸ்பிளே 6.5' இன்ச் அளவு கொண்ட முழு HD+ சூப்பர் அமோலட் (Super AMOLED) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
கேமரா பற்றி பார்க்கையில், இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முன்பக்க செல்பி கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி பின்பக்க சென்சார் ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட் ஃபோன் பட்டியலிடப்பட்டுள்ளது. சமீபத்திய பட்டியல் படி, சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஆனது மீடியாடெக் (MediaTek) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் பட்டியல் காண்பித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி சிப்செட் (Samsung Galaxy A15 5G chipset):
முன்னதாக லீக்ஸ் செய்யப்பட்ட தகவல் இது மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ (MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட்டாக இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த ஃபோன் 5,000mAh பேட்டரியைப் பேக் செய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முக்கிய 50 மெகாபிக்சல் சென்சார் தவிர 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு (microSD) வழியாக 1TB ஸ்டோரேஜ் உடன் இது வெளிவரும். என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான One UI உடன் அனுப்பப்படும்.


Click it and Unblock the Notifications







