Home
Mobile

கொத்தா தூக்குவீங்க.. 50எம்பி கேமரா.. Dimensity சிப்செட்.. வருகிறது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கீக்பெஞ்ச் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனின் சிப்செட் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ chipset) வசதியுடன் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Dimensity சிப்செட்.. வருகிறது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயன்களுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன்ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனில் ஒன் யுஐ 6(One UI 6)சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dimensity சிப்செட்.. வருகிறது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன்ஆனது இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A15 5G will be launched with Dimensity 6100 Plus chipset:Geekbench listing reveals : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X