Home
Mobile

விலையை கேட்டால் நீங்களே ஒன்னு வாங்குவீங்க.. 50MP கேமரா.. 128GB மெமரி.. புது Samsung போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஆண்டு தொடக்கத்தில் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விலையை கேட்டால் நீங்களே ஒன்னு வாங்குவீங்க.. புது Samsung போன்..

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதி உள்ளது. இதனுடன் மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனில் ஒன் யுஐ (One UI) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

விலையை கேட்டால் நீங்களே ஒன்னு வாங்குவீங்க.. புது Samsung போன்..

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,400 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A15 5G price and specifications leaked online: check Full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X