பொசுக்குனு ரூ.2,500 விலைக்குறைப்பு.. திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் Samsung-ன் 5G Phone.. என்ன மாடல்?
Samsung: ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் லேட்டஸ்ட் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டதும்.. அதே ஸ்மார்ட்போனின் பழைய வெர்ஷனின் விலையை குறைப்பது - மொபைல் சந்தையில் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். சமீபத்தில் ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் (Apple iPhone 16 Series) மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில் பழைய ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் விலைகள் குறைக்கப்பட்டதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம். ஆனால் சாம்சங் நிறுவனம் சற்றே வித்தியாசமாக - முதலில் விலையை குறைத்துவிட்டு, பின்னர் அறிமுகம் செய்ய உள்ளது.
சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் அதன் கேலக்ஸி ஏ16 5ஜி (Galaxy A16 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் இந்த அறிமுகத்திற்கு முன்னதாக சாம்சங் தனது கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G) ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட, இது பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் (Flipkart's Big Billion Days) அல்லது அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon's Great Indian Festival) போன்ற விற்பனை நிகழ்வுகளின் போது அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரசியமாக கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதுமே ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது. புதிய விலைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், அதிகபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி.
சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ16 4ஜி மாடல் ஆனது முந்தைய சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி (Samsung Galaxy A15 4G) மாடலை விட சிறந்த அம்சங்களை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி (Samsung Galaxy A14 4G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஆகிய மாடல்களுக்கு இடையே நிறையே வேறுபாடுகள் இருந்தன.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஆனது 6.5 இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் (6.5-inch Super AMOLED display) வருகிறது. இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (800 nits brightness) போன்ற உயர்நிலை அம்சங்களை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Mediatek Helio G99) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கிறது.
அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 5000எம்ஏஎச் பேட்டரியை (5000mAh Battery) கொண்டுள்ளது. இந்த பேட்டரி 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை (25W Fast Charging Support) வழங்குகிறது.
கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஒன்யு 6 (One UI 6) இன்டர்பேஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போனிற்கு 4ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்டேட்கள் (Software Updates) மற்றும் 5 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications