நா ரெடி தான் வரவா.. விரைவில் புது போனை இறக்கிவிடும் சாம்சங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் விரைவில் அசத்தலான கேலக்ஸி ஏ15 4ஜி போன்கனை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி (Samsung Galaxy A15 4G) போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது சாம்சங் கேலக்ஸி 15 4ஜி போன் ஆனது தரமான ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி99 (octa-core Helio G99) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி போனின் அம்சங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி (Samsung Galaxy A14 4G) போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க பேனலில் கணிசமான பெஸல்கள் உள்ளன மற்றும் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சும் உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த போனில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளன.குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் கேலக்ஸி ஏ14 ஆனது ஃபுல்-எச்டி வீடியோக்களை 30fps வேகத்தில் ரெக்கார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளது. மற்ற முக்கிய அம்சங்களைப் பொறுத்தவரை, இது மைக்ரோ எஸ்டி கார்டு (1டிபி வரை), டூயல் சிம் கார்டு, சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








