Home
Mobile

விஸ்வரூப மாடல்.. OLED டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. ஆண்ட்ராய்டு 13.. 50எம்பி கேமரா.. எந்த போன்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது இந்த கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இந்த சாம்சங் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி ஏ15 4ஜி போன் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளைவைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

விஸ்வரூப மாடல்.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த போன்?

சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 4G specifications): 6.5-இன்ச் ஒஎல்இடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் தரும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

விஸ்வரூப மாடல்.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த போன்?

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்

அதேபோல் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்தியாவில் போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo courtesy: Phonestalk

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A15 4G design, colors and specifications leaked online: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X