Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமராவுடன் சத்தமின்றி புதிய Samsung போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது கேலக்ஸி ஏ14 போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ14 அம்சங்கள்: 6.6-இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய போன். மேலும் 1,080x2,40 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி கேமராவுடன் சத்தமின்றி புதிய சாம்சங் போன் அறிமுகம்.!

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு One UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும்.

50எம்பி கேமராவுடன் சத்தமின்றி புதிய சாம்சங் போன் அறிமுகம்.!

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி, டூயல் சிம், வைஃபை 802.11, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 201 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஜி வசதியை தவிர மற்ற அனைத்து சிறப்பு அம்சங்களையும் இந்த போன் வழங்குகிறது.

50எம்பி கேமராவுடன் சத்தமின்றி புதிய சாம்சங் போன் அறிமுகம்.!

என்ன விலை? சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் விலை MYR 799 (இந்திய மதிப்பில் ரூ.14,700) ஆக உள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 With 50-megapixel Officially Launched: Check Price Specifications. : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X