அவசரப்பட்டு இந்த Samsung கேலக்ஸி ஏ14 போனை வாங்க நினைக்காதீங்க: ஏனெனில்?

|

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான
அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கேலக்ஸி ஏ14 போனின் மாடல் நம்பர்

கேலக்ஸி ஏ14 போனின் மாடல் நம்பர்

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ14 போனின் மாடல் நம்பர் SM-A145P என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸிஏ14 போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எஇல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன்
டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்

ஹீலியோ ஜி80 சிப்செட்

ஹீலியோ ஜி80 சிப்செட்

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போன் 4ஜி வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது தேவை இல்லாத வேலை தான். அதாவது 5ஜி போன்களை தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.குறிப்பாக இந்த போன் 5ஜி வசதியுடன் வெளிந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங் போன்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி,சாம்சங் கேலக்ஸி ஏ14 போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

சாம்சங் கேலக்ஸி ஏ14 விலை

சாம்சங் கேலக்ஸி ஏ14 விலை

சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் ரூ.10,000 அல்லது ரூ.13000 விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 will be launched soon with 50MP main camera, 5000mAh battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X