Home
Mobile

2023ம் ஆண்டின் முதல் 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் கேலக்ஸி எப்04 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.7,499-விலையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 2023 ஆண்டின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி ஏ14 5ஜி

கேலக்ஸி ஏ14 5ஜி

அதாவது சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த இரண்டு நாடுகளிலும் வெவ்வேறு சிப்களுடன் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

தனித்துவமான சிப்செட்

தனித்துவமான சிப்செட்

ஐரோப்பாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்காவில் Dimensity 700 சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.

 அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

 தரமான பேட்டரி

தரமான பேட்டரி

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 அசத்தலான கனெக்டிவிட்டி

அசத்தலான கனெக்டிவிட்டி

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி ஏ14 5ஜி விலை

கேலக்ஸி ஏ14 5ஜி விலை

4ஜிபி/6ஜபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் $200(இந்திய மதிப்பில் ரூ.16,500) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ஐரோப்பாவில் இதன் விலை EUR 229 (இந்திய மதிப்பில் ரூ.20,100)ஆக உள்ளது. கருப்பு, வெள்ளி, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 5G smartphone launched at Rs.16,500: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X