Home
Mobile

மிரள விடும் சாம்சங்.. ரூ.15,499 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய வேரியண்ட்..

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி தனது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனின் புதிய வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனின் புதிய வேரியண்ட் விலை மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மாடல் ரூ.15,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மாடல் ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரள விடும் சாம்சங்.. ரூ.15,499 போதும்..அறிமுகமானது புதிய வேரியண்ட்..

இதுதவிர 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மாடல் ரூ.16,999 விலையிலும், பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.18,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். மேலும் சாம்சங் இணையதளத்தில் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள்: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். மேலும் 1,080x2,40பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன். எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி
ஸ்மார்ட்போன்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ14 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

மிரள விடும் சாம்சங்.. ரூ.15,499 போதும்..அறிமுகமானது புதிய வேரியண்ட்..

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த சாம்சங் போனின் எடை 202 கிராம் ஆகும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 5G Launched with 4GB RAM, 128GB Storage:check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X