சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ( (SAMSUNG Galaxy A14 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி எக்ஸிநோஸ் சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது. மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11,249 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள் (SAMSUNG Galaxy A14 5G Specifications): அதாவது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்தது இந்த சாம்சங் போன். 1,080x2,40 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த போனில் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். எனவே இதன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ14 5ஜி போன். 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








