Home
Mobile

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ரூ.8999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் SAMSUNG 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் இப்போது பிக் பில்லியன் டேஸ் சேல் 2024 (Flipkart Big Billion Days Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (SAMSUNG Galaxy A14 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (SAMSUNG Galaxy A14 5G) போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.8,999 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ஆஃபரில் SAMSUNG 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள் (SAMSUNG Galaxy A14 5G Specifications): தரமான Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். மேலும் 1,080x2,40பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ14 5ஜி போன். மேலும் இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ஆஃபரில் SAMSUNG 5ஜி போன்..

5000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த சாம்சங் போனின் எடை 202 கிராம் ஆகும். குறிப்பாக இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 5G is available at 35 percent discount in Flipkart Big Billion Days sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X