Home
Mobile

ஆரம்ப விலை ரூ.14,999 மட்டுமே- இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ13, ஏ23: 50 எம்பி கேமரா, 8ஜிபி ரேம்!

சாம்சங் கேலக்ஸி ஏ13 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் 50 எம்பி கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சாம்சங் இணையதளம் மூலமாக இந்த சாதனத்தை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ23

சாம்சங் கேலக்ஸி ஏ13 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ23

சாம்சங் இன்று இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ13 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ23 என்ற இரண்டு புதிய ஏ-சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி சாதனத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து தற்போது இந்த சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ13 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,499 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.20,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களானது வெளிர் நீலம், பிளாக் மற்றும் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வருகிறது.

சாம்சங் இந்தியா இணையதளம் மூலமாக வாங்கலாம்

சாம்சங் இந்தியா இணையதளம் மூலமாக வாங்கலாம்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 என இருக்கிறது. மேலும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களானது பிளாக், வைட், வெளிர் நீலம் மற்றும் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் சாம்சங் இந்தியா இணையதளம் மூலமாக வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ23 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. சாம்சங் எஸ்ஓசி மாடலை மறைத்து வைத்திருக்கிறது, இருப்பினும் இது ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ23 கேமரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ23 கேமரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் பின்புறத்தில் 5 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு ஜோடி 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் கேமரா உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 8 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஸ்மார்ட்போனில் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன்யூஐ 4.1 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் ஆதரவோடு இயங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ13 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ13 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மாலி ஜி52 எம்பி1 ஜிபியூ உடனான எக்ஸினோஸ் 850 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் பின்புறத்தில் 5 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு ஜோடி 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் கேமரா உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 8 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1 தனிப்பயன் ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4ஜி ஆதரவோடு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A13 and Galaxy A23 Launched in India With 50MP Cameras, Android 12 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X