பிப்ரவரி 2022: 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி.!
சாம்சங் நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில்
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்க இன்பினிட்டி-வி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை
கொண்டுள்ளதுசாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $249.99 (இந்திய மதிப்பில் ரூ.18,700) ஆக உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும்.அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications