விரைவில் 50எம்பி கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி.!
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சாதனம் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக கேலக்ஸி ஏ13 5ஜி இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இதுதவிர கேமிங் வசதிக்கு என்றே தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ12
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது . பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என
மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.மேலும் கைரேகை சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் விரைவில் வரும் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications