25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வசதிகளுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது.

அதாவது இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் சாம்சங் நிறுவனமும் விரைவில் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மாரட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆப் வசதியை இயக்குவதற்கும்,கேமிங் போன்றவற்றிற்கும் மிக வேகமாக செயல்படும் இந்த அசத்தலான சிப்செட் வசதி. அதேபோல் அண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.48-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் கேமிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர எல்இடி பிளாஷ், கேமரா அம்சங்கள் பல்வேறு தரமான அம்சங்களுடன் வெளிவரும் இந்த தரமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாம்சங் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். பின்பு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத
விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications