Home
Mobile

நீங்க வாங்க களத்தில் சந்திப்போம்., போட்டி பலமா இருக்கும்- சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி சாதனம் இப்படி தான் இருக்கும்

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி என்று அழைக்கப்படும் மலிவான 5ஜி சாதனத்தில் சாம்சங் வேலை செய்கிறது என்ற தகவல் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் இதுகுறித்த அறிக்கை இந்த தகவலை வெளிப்படுத்தியது. இதில் கேமரா மற்றும் பேட்டரி விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போனில் ஏஎம்-ஏ136பி மாதிரி எண் இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டது. இதன் வெளியீடு இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2022 தொடக்கத்தில் இருக்கலாம் என கூறப்பட்டது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி குறித்த வேறு எந்த தகவலும் பகிர்ந்து கொள்ளவில்லை.

சாம்சங் கேலக்ஸி A13 5G பேட்டரி & கேமரா விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி A13 5G பேட்டரி & கேமரா விவரங்கள்

கேலக்ஸி கிளப்பின் அறிக்கையின்படி, கேலக்ஸி ஏ13 5ஜி சாதனமானது 50 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. அறிக்கையில் சரியான சென்சார் பெயர் குறிப்பிடவில்லை. இருப்பினும் இந்த சாதனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10 பிரைம் மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் போன்று அதே 50 எம்பி சென்சார் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை பேக் செய்யும் எனவும் இதில் அதே கேலக்ஸி ஏ12-ல் கிடைக்கிறது. சாதனம் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி அதன் முன்னோடி கேலக்ஸி ஏ12 சாதனத்தை விட சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் இயங்கும் என நம்பப்படுகிறது மற்றும் கேலக்ஸி ஏ13 5ஜி, கேலக்ஸி ஏ12 உடன் ஒப்பிடும்போது வேகமான சார்ஜிங் மற்றும் சக்தி வாய்ந்த சிப்செட்டை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட்

மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட்

கேலக்ஸி ஏ12 மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட் மூலம் இயங்கும் எனவும் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, குவாட் கேமரா அமைப்போடு வரும் எனவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இது அனைத்தும் தகவல்களாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி: விலை

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி: விலை

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி இந்திய மதிப்புப்படி ரூ.17,300 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. தென்கொரிய பிராண்டில் இருந்து கிடைக்கும் 5ஜி - இயக்கப்படும் தொலைபேசி ஆகும். கேலக்ஸி ஏ22 5ஜி சாம்சங்கின் மிகவும் மலிவான 5ஜி ஆகும் எனவும் இதன் விலை ரூ.19,999 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் கேலக்ஸி ஏ22

விரைவில் கேலக்ஸி ஏ22

கேலக்ஸி ஏ13 5ஜி கசிந்த விலை உண்மையாக இருக்கும்பட்சத்தில் கேலக்ஸி ஏ13 விரைவில் கேலக்ஸி ஏ22 இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் ரியல்மி மற்றும் போக்கோ பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில் இருக்கும் எனவும் பல பட்ஜெட் 5ஜி சாதனங்களுக்கு போட்டியிடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.குறிப்பாக இந்த கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி எஃப்42 ஸமார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வடிவடிமைப்புடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A13 5G Smartphone Specs and Price Leak: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X