Home
Mobile

விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த
வரிசையில் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ற்போது கேலக்ஸி ஏ13

தற்போது கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் ஆனது 6.48-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன்.

 Dimensity 700 பிராசஸர் வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கம். அதேபோல் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி
செல்பீ கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான கேலக்ஸி ஏ13 5ஜி மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ13

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி சாதனம்.குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A13 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X