Home
Mobile

பட்ஜெட் விலையில் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை நேற்று (டிசம்பர் 1) அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $249.99 (இந்திய மதிப்பில் ரூ.18,700) ஆக உள்ளது. பின்பு டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று வரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்க இன்பினிட்டி-வி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில்

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளதுசாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல்.

க்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில்

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில்

இந்த புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடல்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இல்லை.மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A13 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X