தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த சாதனம் தனித்துவமான அமசங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும்.பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சாம்சங் ஒன் யு.ஐ. கோர் 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெபத் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவுடன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்,எப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் எனப் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் இந்நிறுவத்தின் அனைத்து சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications