ரூ.12,999-விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சாம்சங்.காம். மற்றும் சில ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. அதபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனுக்கு குறிப்பிட்ட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

TFT Infinity-V டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

5000 எம்எஏச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.மேலும் கைரேகை சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications