விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ தொடரில் புதிய முதன்மை ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏ சீரிஸில் முன்னதாகவே பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதுகுறித்த சமீபத்திய தகவலின்படி கேலக்ஸி ஏ12 வருகிற மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ12
சாம்சங் கேலக்ஸி ஏ12 ரஷ்யாவில் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாதிரி எண் SM125F/DSN உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து 91 மொபைல்ஸ் நிறுவனத்தின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஏ12 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
இருப்பினும் சாம்சங் ஏ12 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் பட்டியலில் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து முன்னதாகவே பல தகவல்கள் கசிந்துள்ளது. வெளியான தகவல்கள் அனைத்தும் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளன.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
ஸ்மார்ட்போன் சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் மாறுபாடாக சாம்சங் கேலக்ஸி ஏ12 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியா டெக் ஹீலியோ பி 35 செயலி
சாம்சங் கேலக்ஸி ஏ12 மீடியா டெக் ஹீலியோ பி 35 செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ12 கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கும்.

எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ12 அதே எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். கேமரா விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை வசதி இருக்கும். இருப்பினும் சாம்சங் கேலக்ஸி ஏ 11 மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரியைவிட அதிக சக்தி பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ 12 எல்சிடி டிஸ்ப்ளே பேனலுடன் வரும். இந்த டிஸ்ப்ளே பேனலில் ஒரு செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் உள்ளது. சாதனத்தின் வன்பொருள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் தெரிவிக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் மிக விரைவில் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
file images


Click it and Unblock the Notifications