இந்தவாரமே வருகிறதாம்: அட்டகாச அம்சங்களோடு சாம்சங் கேலக்ஸி ஏ12!
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 720 × 1500 ரெசல்யூஷனுடன் இந்தியாவில் இந்த வார இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் நிறுவனம் இந்தவாரம் அறிமுகப்படுத்த உள்ளது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனானது ஏ02 எஸ் உடன் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி விலை இந்திய மதிப்புப்படி ரூ.15,700 ஆக இருக்கிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,500 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, ப்ளூ மற்றும் சிவப்பு என நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 720 × 1500 ரெசல்யூஷன ஆகியவைகளுடன் வருகிறது. இந்த சாதனமானது 2.3ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக்கூடிய ஆக்டோகோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஹீலியோ பி35 எஸ்ஓசி ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய வசதியுடன் வருகிறது.

குவாட் கேமரா அமைப்பு
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 48 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 எம்பி கேமரா சென்சாருடன் வருகிறது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. இணைப்பு விருப்பங்களாக வைஃபை, ப்ளூடூத் 5.0 ஆதரவுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications