திடீரென சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனுக்கு திடீரென விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலை முன்பு ரூ.13,999-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.16,499-ஆக இருந்தது.தற்போது இந்த மாடலை ரூ.15,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் விலைப்பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு
ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.மேலும் கைரேகை சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பை தொடர்ந்து சாம்சங் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம்செய்ய இருப்பதாக கூறி இருந்தது.


Click it and Unblock the Notifications