Home
Mobile

இந்தியாவில் வேறமாதிரி இருக்கும்: சாம்சங் கேலக்ஸி ஏ12 எப்படி இருக்கும் தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ஆதரவு பக்கமான சாம்சங் இந்தியா இணையதளத்தில் விலை நிர்ணயம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4ஜிபி ரேம் மாறுபாட்டுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரக்குறிப்புகளை டிப்ஸ்டர் முகுல் சர்மா கசியவிட்டார். இதில் கசிந்த தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, மேக்ரோ லென்ஸ், ஆழ சென்சார், மேக்ரோ லென்ஸ் உள்ளிட்ட கேமரா அமைப்பை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000-த்துக்கு கீழ் வரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்பினிட்டி டிஸ்ப்ளே

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்பினிட்டி டிஸ்ப்ளே

அதே சமயத்தில் டிப்ஸ்டரின் மற்றொரு அபிஷேக் யாதவ் இந்திய வேரியண்ட் குறித்து வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ12 இந்திய வேரியண்ட் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ஆகிய வேரியண்ட்டிலும் இதன் விலை ரூ.12,999 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்திய வேரியண்ட் அறிமுகம்

இந்திய வேரியண்ட் அறிமுகம்

அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.12,999 எனவும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ரூ.13,999 எனவும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் மாதம் உலகளவில் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் வேறு வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A12 India Variants Specs and Price Leak: 4GB Ram, Quad Rear Cameras and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X