சாம்சங் கேலக்ஸி ஏ12, கேலக்ஸி ஏ02எஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12, கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்சமயம் ரஷ்யாவில் கேலக்ஸி ஏ12, கேலக்ஸி ஏ02எஸ் பயனர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அனைத்து நாட்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி ஏ12, கேலக்ஸி ஏ02எஸ் பயனர்களுக்கு தனித்துவமான அம்சங்களை கொடுக்கும் இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். அதாவது சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி,ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ12 சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 பிராசஸர்
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 மெமரி வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.மேலும் கைரேகை சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் மாடல்


Click it and Unblock the Notifications