Home
Mobile

Samsung Galaxy A11: மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ11 டிஸ்பிளே வசதி

கேலக்ஸி ஏ11 டிஸ்பிளே வசதி

இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் இன்பினிட்டி-ஒ-டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, 720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ11 கேமரா

கேலக்ஸி ஏ11 கேமரா

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பலவேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் வசதி மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது.மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 கைரேகை சென்சார் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ்,4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்கள் இல்லை, கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A11 Launched with 6.4-inch punch-hole display and 13MP triple cameras : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X