Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று தனது கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா: பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும், சாம்சங் இ-ஷாப் போன்ற ஆன்லைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ10எஸ்  டிஸ்பிளே:

கேலக்ஸி ஏ10எஸ் டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 அருமையான சிப்செட் வசதி:

அருமையான சிப்செட் வசதி:

கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ10எஸ் சேமிப்பு வசதி:

கேலக்ஸி ஏ10எஸ் சேமிப்பு வசதி:

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்பறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

 டூயல் ரியர் கேமரா:

டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம்,ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான விலை:

அட்டகாசமான விலை:

2ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது, அதேபோல் 3ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A10s Launched in India with Fingerprint Sensor: Price, Sale Date, Specifications and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X