டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த மாதம் இறுதிக்குள் நீலம், பசுமை, சிவப்பு மற்றும் கருப்பு நிற மாறுபாடுகளுடன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி:
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

டூயல் ரியர் கேமரா:
கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+2எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,000-ஆக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications