6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஏ107எப்/டிஎஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.
இப்போது கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது, பின்பு இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனம் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆகடோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை, இருந்தபோதிலும் மூன்று அல்லது இரண்டு ரியர் கேமரா ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தில் 3900எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனம் பல்வேறு இணைபப்பு ஆதரவுகளுடன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications