சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் கேலக்ஸி ஏ10 வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1520 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7884 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது கேலக்ஸி ஏ10 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக அருமையாக இருக்கும்.
குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 3400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன்.
4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்திற்கு இப்போது கிடைத்துள்ள அப்டேட் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications