அறிமுகமானது புது சாம்சங் போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஐபி64 ரேட்டிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளியாகி உள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ08 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ08 அம்சங்கள்(Samsung Galaxy A08 Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிளஸ் சிப்செட் (MediaTek Helio G99+ chipset) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஒஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
சர்க்கிள் டு சர்ச் 3.0, ஜெமினி மற்றும் பெர்பிளக்சிட்டி போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,4990ஆக உள்ளது. டார்க் ப்ளூ, கிரீன், சில்வர் ஆகிய கலர்களில் இந்த சாம்சங் போன் வாங்க கிடைக்கும். தற்போது சாம்சங்.காம், முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
